Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 06, 2021] சென்னை

Loading

Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 06, 2021] சென்னை:

பிலவ வருடம் வைகாசி 23ஆம் தேதி ஜூன் 6,2021 ஞாயிற்றுக்கிழமை. ஏகாதசி திதி காலை 06.20 மணி வரை அதன் பின் துவாதசி. அசுவினி இரவு 02.27 மணி வரை அதன் பின் பரணி. சந்திரன் இன்றைய தினம் மேஷம் ராசியில் பயணம் செய்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்று உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். உங்களுடைய வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் லாபம் வரும் பணவரவு தாராளமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இரு அணிகள் இணைப்புக்கு பிறகு பரபரக்கும் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இடையிலான சந்திப்பு.. பின்னணி என்ன?

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கும். இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடித்து அதில் வெற்றி காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். திருமணப்பொருத்தம் – மகிழ்ச்சியான மண வாழ்க்கை, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர என்ன பரிகாரம்

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஜூன் மாத ராசி பலன் 2021 : இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்பங்கள் நிறைந்த மாதம்

கடகம்
சந்திரன் இன்றைய தினம் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். வீட்டில் பெண்கள் பொறுப்பு அறிந்து நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திடீர் வருமானத்தால் கடன் பிரச்சினை குறையும். கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினைகள் நீங்கி மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

கன்னி
சந்திரன் இன்று எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். பயணங்களைத் தவிர்த்து விடவும். பண விவகாரங்களில் கவனம் தேவை. திடீர் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் தேடி வரும். உறவினர்கள் மூலம் பண உதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய இடமாற்றம் ஏற்படுவதற்கான செய்தி தேடி வரும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன சச்சரவுகள் வரும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும்.

மகரம்
சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுக்களை இன்று தவிர்க்கவும். நண்பர்களுடன் நீண்ட நாட்கள் கழித்து பேசி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நெருங்கியவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப்பிரச்சினைகள் நீங்கும் பொருளாதார நெருக்கடிகள் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பயணங்களால் நன்மை ஏற்படும்.

0Shares

Leave a Reply