தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவரும் ஜக்டோ ஜியோ வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தித்தொடர்பாளர் திரு கு. தியாகராஜன் அவர்கள் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பேசியதாவது..
முத்தமிழறிஞர்
கல்வி காவலர்
டாக்டர் கலைஞர் அவர்களின் 98 வது ஆண்டு முன்னிட்டு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவரும், ஜாக்டோ ஜியோ வின் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் திரு கு. தியாகராஜன் அவர்கள் தமிழக முதல்வர் தளபதி அவர்களின் ஆணைக்கினங்க செங்கல்பட்டு மாவட்டம் சிட்லம்பாக்கம் ஒன்றியம் ஒட்டியம்பாக்கம்
பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வித்தும், அந்தப்பகுதியில் வசிக்கக்கூடிய மலைவாழ் மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து 500க்கு மேற்பட்டோருக்கு உணவினை வழங்கினார்..
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவரும் ஜக்டோ ஜியோ வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தித்தொடர்பாளர் திரு கு. தியாகராஜன் அவர்கள் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பேசியதாவது..
தமிழகத்திற்கு கலைஞர் ஆற்றியுள்ள பல்வேறு பணிகளை நினைவு கூர்ந்து பேசினார். ஐந்து முறை முதலமைச்சராக தமிழகத்திற்கு பொறுப்பேற்று பல்வேறு வகையான தொலைநோக்குத் திட்டங்களை ஏழை, எளிய,பாமர மக்களின் வாழ்க்கை முன்னேற கலைஞர் எவ்வாறு பாடுபட்டார் என்பதையும், அவருடைய ஆட்சி நிர்வாகத்தில் பல்வேறு வகையான மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு உழைத்தவர் என்பதையும், ஏழை,எளிய மக்களின் உயிரை காப்பாற்றுவதற்கு இந்தியாவிலேய முதன்முறையாக மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தவர் என்றும்,தமிழக்கும் தமிழ் மொழிக்கும் வளர்ச்சி பாடுபட்டவர் தமிழ்மொழியை செம்மொழி அந்தஸ்து பெற்றுதந்தவர். கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநிதியை கொள்கையை நிலைநாட்டிட தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தவர். இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மிக்க மாநிலமாக மாற்றியவர், கலைஞர் அவர்கள் மாநில சுயாட்சி கொள்கைக்கு வித்திட்டவர். ஆசிரியர்களுக்கு வாழ்க்கை தரம் உயர தொகுதியத்தை ரத்து செய்து காலமுறை கொண்டு வந்தவர்,மகளிர் பேறு கால விடுப்பு,மருத்துவ காப்பீடு, உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் என்றும், அதுபோல மாணவர்கள் பயன்படக்கூடிய பல்வேறு வகையான திட்டங்களை கொண்டு வந்தவர், மருத்துவ கல்லூரிக்கு நுழைவுத்தேர்வை ரத்து செய்தவர், கல்வியில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை போக்கும் விதமாக சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியவர். மாணவர்களுக்கு இலவச பாஸ், உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தின் கல்வி அறிவை மேம்படுத்தியவர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக தகவல் தொழில்நுட்பத் துறையை அமைத்தவர் என்று ம் கலைஞர் அவர்களால் தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்றுள்ளது என்று பேசினார்.
முன்னதாக
உணவினை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் தமிழக முதல்வருக்கும்,தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் அவர்களுக்கு மகிழ்வுடன் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்இந்த நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட
மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்திருமதி சுமதி அவர்கள்,செங்கல்பட்டு மாவட்ட
துணைத்தலைவர்திரு டெல்லி பாபு அவர்களகாஞ்சிபுரம் மாவட்டத் துணைச் செயலாளர்
திரு சேவியர் ஆன்டனி அவர்கள் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் இயக்க தூண்களாகிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்…