தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்,கொரோனா சிறப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது ஊரக தொழிற்துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி. ஆர். பாலு மற்றும் கே. ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஏ. கிருஷ்ணசாமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.