ஏழை எளிய குடும்பங்களுக்கு பவ்டா தொண்டு நிறுவனம் நிவாரண உதவி.

Loading

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பவ்டா தொண்டு நிறுவனம் மூலம் 150 ஏழை எளிய குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.

செஞ்சியை சேர்ந்த ஏழை எளிய மக்கள் 150 பேருக்கு ரூ 750 மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகளை பவ்டா தொண்டு நிறுவனம் சார்பில் ஏழைகளுக்கு அமைச்சர் செஞ்சிமஸ்தான் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன இயக்குனர் டாக்டர் ஜாய்லின்தம்பி, பொது மேலாளர் எஸ்.கே.ஆர்.பாரி, துணை மேலாளர் எஸ்.கோவிந்தராஜன், நிர்வாகிகள் சங்கர்செந்துநாயகம், வேணுகோபால், சந்தானகிருஷ்ணன், பார்சுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply