Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன்
![]()
Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் புதன் கிழமை மே 05, 2021 சென்னை:
பிலவ வருடம் சித்திரை 22ஆம் தேதி மே 05, 2021 புதன்கிழமை. நவமி திதி பகல் 01.22 மணி வரை அதன் பின் தசமி திதி அவிட்டம் காலை 09.10 மணி வரை அதன் பின் சதயம். சந்திரன் இன்றைய தினம் கும்பம் ராசியில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது கவனம் தேவை. புதன் பகவான் ஆதிக்கம் நிறைந்த இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானமான 11வது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புத்திர வழியில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும்.
ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு 10ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இன்று உத்தியோகஸ்தர்கள் பணிகளில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் நலம் நன்றாக இருக்கும். பெண்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். முகத்தில் பொலிவு அதிகரிக்கும்.
மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு 9ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி தேடி வரும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். பண வரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினை குறையும்.
கடகம்
சந்திரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகரிக்கும். செய்யும் வேலைகளில் கால தாமதம் உண்டாகும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப்போடவும். புதிய முயற்சிகள் தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.
சிம்மம்
சந்திரன் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் குதூகலம் அதிகமாகும். இன்று வீட்டில் சந்தோஷ நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு உற்சாகமாக இருப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளி வட்டார நட்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத விதமாக திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வெளியூர் பயணம் செல்வீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதார பிரச்சினைகளால் மன நிம்மதி குறையும். வியாபார ரீதியாக பண நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் வரும். சிலருக்கு பூர்வீக சொத்து விற்பனையில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களின் பொருளாதார நிலை சூப்பராகவே இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் பணி பாராட்டத்தக்க வகையில் இருக்கும். உங்களின் பயணம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நல்ல செய்தி வீடு தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுக படுத்தி லாபம் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.
மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதாரம் நிலை நன்றாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் ஏற்படும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பண வரவு அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும்.
மீனம்
சந்திரன் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உடல்நிலையில் கவனம் செலுத்தவும். மந்தநிலை உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
