Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன்

Loading

Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை மே 2, 2021 சென்னை:

பிலவ வருடம் சித்திரை 19 ஆம் தேதி மே 02, 2021 ஞாயிற்றுக்கிழமை. சஷ்டி திதி பகல் 02.50 மணி வரை அதன் பின் சப்தமி திதி. பூராடம் காலை 08.09 மணி வரை அதன் பின் உத்திராடம். சந்திரன் இன்றைய தினம் தனுசு ராசியிலும் மகர ராசியிலும் பயணம் செய்கிறார். ரிஷபம், மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் பிள்ளைகளால் நிம்மதி உண்டு.

ரிஷபம்
சந்திரன் சஞ்சாரம் பிற்பகல் வரை சாதகமாக இல்லை. இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பிற்பகல் 02.46 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும். பயணங்களையும் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மிதுனம்
சந்திரன் சஞ்சாரம் பிற்பகல் வரை ஏழாம் வீட்டில் உள்ளது. இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் புதிய முயற்சியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார ரீதியாக கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களைத் தவிர்த்து விடவும் பணம் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

கடகம் இன்று நீங்கள் கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

சிம்மம்
சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ற பதவி உயர்வு கிட்டும். வருமானம் பெருகும். கடன் பிரச்சினை தீரும். வீட்டில் உற்சாகமாக இருப்பீர்கள்.

கன்னி
சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும் தவிர்த்து விடவும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.

துலாம்
சந்திரன் பயணத்தால் சந்தோஷம் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைபளு நீங்கும்.

விருச்சிகம்
சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். கடன்கள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவி கிட்டும்.

தனுசு
சந்திரன் பயணத்தால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். நிதி நெருக்கடிகள் நீங்கும்.

மகரம்
சந்திரன் இன்று பிற்பகல் உங்கள் ராசிக்கு வருகிறார். இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். திடீர் பயணங்களைத் தவிர்த்து விடவும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும்.

கும்பம்
சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். நல்ல செய்திகள் வீடு தேடி வரும். இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். அக்கம் பக்கத்தினர் உதவி தேடி வரும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வருகிறார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *