துப்புரவு தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்
கொரோனா காலத்திலும் உயிரை துச்சமாக எண்ணி பணி செய்த துப்புரவு தொழிலாளர்களுக்கு பம்மல் பகுதியை சேர்ந்த அர்ச்சகர் அனந்த பத்மநாதன் மற்றும் விஜயா அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார்கள்
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் அனந்த பத்மநாதன் இவர் அதே பகுதியில் கோவில் அர்ச்சகராக இருந்து வருகின்றார். அதுமட்டுமின்றி அங்குள்ள பொதுமக்களுக்கு தொடர்ந்து பொது சேவைகளை செய்து வருகின்றார்.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பல பேர் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர் குறிப்பாக துப்புரவு தொழிலாளர்கள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையிலும் அவர்கள் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.
அவர்களை கௌரவிக்கும் வகையில் பம்மல் அனாகபுத்தூர் போன்றவை உள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து 5 கிலோ அரிசி, பருப்பு, மளிகை பொருட்களைக் கொடுத்து பாதுகாப்பாக பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார் மேலும் முக கவசம், சனிடைசர், கை உரைகள், அனைத்தையும் கொடுத்து பாதுகாப்பாக பணி செய்யும்படி அறிவுறுத்தினார்.
இதில் , சுமதி,.பிரேம் ஆனந்த், .மகாலட்சுமி, வரதராஜன், மற்றும் அவர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர் மற்றும் அனந்த பத்மநாபன்
அவர்களுக்கு வாங்கிக்கொண்ட துப்புரவு பணியாளர்கள் அவர்களின் நன்றியை தெரிவித்தனர்.