சென்னைபெருநகர காவல் ஆணையாளர் , பெருநகர மாநகராட்சி ஆணையாளருடன்கட்டமைப்புகளை ஆய்வு செய்தார்.

Loading

சென்னை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் சென்னை
பெருநகர காவல் ஆணையாளர் , பெருநகர மாநகராட்சி ஆணையாளருடன்
நேரில் சென்று பாதுகாப்பு பணிகளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள

கட்டமைப்புகளை ஆய்வு செய்தார்.

வருகிற 02.5.2021 அன்று, நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல்
வாக்குப்பதிவின் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற உள்ளதால், சென்னை
பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள்
உத்தரவின்பேரில், சென்னை பெருநகரிலுள்ள லயோலா கல்லூரி, ராணி மேரி
கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை கிறுஸ்துவ கல்லூரி ஆகிய 4
வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.பிரகாஷ், இ.ஆ.ப.,
மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால்,
இ.கா.ப ஆகியோர் இன்று (30.4.2021) ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும்
மையத்திற்கு நேரில் சென்று பாதுகாப்பு பணிகள் மற்றும் அங்கு மேற்கொண்டுள்ள
கட்டமைப்புகளை ஆய்வு செய்து கலந்தாய்வு மேற்கொண்டனர்.

0Shares

Leave a Reply