கள்ளக்குறிச்சி நகரில் நிலவும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு :

Loading

கள்ளக்குறிச்சி நகரில் நிலவும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் பணி தொடங்கியது
கள்ளக்குறிச்சி நகரபகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் நாள்தோறும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்,
இதையொட்டி கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதி, தியாகதுருகம் சாலை, சேலம் சாலை, கச்சிராயபாளையம்சாலை ஆகியவற்றை விரிவுபடுத்துவது தொடர்பாக கலெக்டர் கிரண்குராலா பலமுறை ஆய்வு செய்தார். கொரோனா தொற்று காரணமாக சாலை அகலப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில், நான்குமுனை சந்திப்பு பகுதியை அகலப்படுத்தும் பணி தொடங்கியது. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுசுவரை இடிக்கும் பணி தொடங்கியது.

0Shares

Leave a Reply