தீவிரமாக பரவும் கொரானா வைரஸ் கட்டுப்பாட்டை மீறும் ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பாலக்கோடு.ஏப்.28-
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது பாலக்கோடு பேருந்து நிலையத்திலிருந்து ஆத்துகொட்டாய், பெல்ரம்பட்டி, பொப்பிடி, பாப்பாரப்பட்டி, எலங்காளப்பட்டி, பேளாரஹள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு பொதுமக்களை ஏற்றி செல்லுகின்றனர். தமிழக அரசு கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பொதுமக்கள் மத்தியில் பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆட்டோக்களில் பயணிக்கும்போது ஓட்டுநர் மற்றும் இரண்டு நபர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்த நிலையில் பாலக்கோடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் ஆட்டோக்களில் பத்துக்கும் மேற்பட்ட நபர்களை மூட்டைகள் போல் அடுக்கி கொண்டு செல்லுவதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, மைசூர், ஆந்திர வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு பாலக்கோடு நகரத்திலிருந்து செல்வதால் கிராமப்பகுதிகளில் கொரோனவைரஸ் தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி வீட்டை விட்டு வெளியே வரும்போது பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் கிருமிநாசினி பயன்படுத்தவேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இதை மீறி ஆட்டோக்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வார்கள் முக கவசம் இன்றி செல்வதால் கொரோனா வைரஸ் பரவும் சூழல் உள்ளது பேரூராட்சி நிர்வாகம், வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகள் பெயரளவில் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.