Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன்

Loading

Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் திங்கட்கிழமை ஏப்ரல் 26, 2021சென்னை: பிலவ வருடம் சித்திரை 13 ஆம் தேதி ஏப்ரல் 26, 2021 திங்கட்கிழமை.சதுர்த்தசி திதி பகல் 12.44 மணி வரை அதன் பின் பவுர்ணமி. சித்திரை இரவு 11.06 மணி வரை அதன் பின் சுவாதி. சந்திரன் இன்றைய தினம் கன்னி ராசியில் பயணம் செய்கிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் கடன் பிரச்சினை நீங்கும்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு 5வது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். சகோதர சகோதரி வழியில் நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் பதவிகள் தேடி வரும். எதிர்பாராத பணவரவால் ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காவது வீட்டில் பயணம் செய்கிறார். சுக ஸ்தானத்தில் பயணம் செய்யும் சந்திரனால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வேலையில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறி சற்று முன்னேற்றம் ஏற்படும். வேலையில் கவனமுடன் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் நன்மைகள் ஏற்படும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். செய் தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வரலாம். திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும். பண பற்றாக்குறையால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும் பதவி உயர்வுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். பணவரவு நன்றாக இருக்கும். விருச்சிகம் சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகமாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். சிக்கனமாக செயல்பட்டால் செலவுகளை சமாளிக்க முடியும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். உற்சாகமான நாள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். பெரிய மனிதர்களின் சந்திப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்காத லாபம் ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை ஏற்படும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் செல்ல வேண்டியிருக்கும். வண்டி வாகனங்களில் கவனம் தேவை. காரமான உணவுகளைத் தவிர்த்து விடவும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். திடீர் பண வரவு வந்து திக்கு முக்காட வைக்கும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். தொழில் பார்ட்டனர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *