திருவள்ளூரில் மாவட்ட காவல் துறை சார்பில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் அணிவித்து விழிப்புணர்வு
![]()
திருவள்ளூர் ஏப் 19 : தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசின் விதிமுறைகளான முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதை பெரும்பாலானோர் பின்பற்றாததால் திருவள்ளூர் மாவடட் காவல் துறை சார்பில் திருவள்ளூர் நகரில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார், டிஎஸ்பி., துரைபாண்டியன்,சப்இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி ஆகியோர் தலைமையில் நகரின் மையப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தும், சமூக விலகலை கடைபிடிக்காமலும் முக கவசம் அணியாமலும் பஜாரில் பொருட்களை வாங்க வந்திருந்த பெண்களுக்கு முக கவசத்தை காவல் துறையினர் அணிவித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்
