கும்பகோணம் நகராட்சி அலட்சியத்தால் வெறிநாய் கடித்து 20 பேர் சிகிச்சை

Loading

கும்பகோணம் ஏப்ரல் 19

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரம் மேலக்காவேரியில் ,சிறுவர்கள் பெரியவர்கள் குழந்தைகள் பெண்கள் உட்பட 18.4.2011 ஒரே நாளில் 20க்கும் மேற்பட்டவர்களை தெரு நாய்கள் கடித்து குதறி இருக்கிறது. நாய் கடியால் காயமுற்றவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் மேலக்காவேரி பகுதியில் நூற்றுக்கணக்கான தெருநாய்கள் சர்வசாதாரணமாக அலைந்து திரிந்து வருகிறது .தெரு நாய்களை அப்புறப்படுத்தக்கோரியும் நடவடிக்கை எடுக்க கோரியும் கும்பகோணம் நகராட்சியில் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. கும்பகோணம் நகராட்சியின் அலட்சிய போக்கால்தான் 20க்கும் மேற்பட்டவர்களை ,ஒரே நாளில் தெருநாய்கள் கடித்துள்ளது. மிகுந்த வலியோடு
இன்றைக்கு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மேலக்காவேரி பகுதியை சேர்ந்தவர்கள், கும்பகோணம் கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளித்துள்ளார்கள்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது..

கும்பகோணம் நகராட்சியின் அலட்சியப் போக்கால் மேலக்காவேரி யில் 20க்கும் மேற்பட்ட சிறியவர்கள் பெரியவர்கள் பெண்கள் என அனைவரையும் தெரு நாய்கள் கடித்துள்ளது. காயமுற்று அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று உள்ளார்கள். கும்பகோணம் நகராட்சியிடம் பலமுறை நாய்களை அப்புறப்படுத்தக் கோரி மனு கொடுத்தும், நகராட்சி அலட்சியப்படுத்தி உள்ளது. கும்பகோணம் நகராட்சியின் அலட்சியத்தால் மேலக்காவேரி பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் நாய் கடியால் அவதிப்பட்டு வருகிறார்கள் ஆகவே கும்பகோணம் நகராட்சி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் . நாய் கடியால் அவஸ்தைப்படும் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை வழங்க வேண்டும் என்றும், மேலும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் 20 பேருக்கும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *