ஒட்டன்சத்திரத்தில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர்&வெளியீட்டாளர் சங்கம் சார்பில் கபசுர குடிநீர் முக கவசம் வழங்கப்பட்டது.

Loading

தமிழகத்தில் உருமாறிய கொரோனோ தாக்கத்தின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் இச்சூழலில் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர்&வெளியீட்டாளர் சங்கம் சார்பில், தலைமையின் ஆலோசனைக்கிணங்க திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு சுமார் 300க்கும் மேற்பட்டோர்க்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் ஆகியன ஒட்டன்சத்திரத்தில் உள்ள அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர்&வெளியீட்டாளர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் மற்றும் ஒட்டன்சத்திரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் வீரபாகு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா தாக்கத்தைப் பற்றி எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமானோருக்கு முக கவசமும், கபசுர குடிநீரும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடக செய்தி நண்பர்கள், போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *