கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்ஸ்களை ஆட்டோக்களில் ஒட்டி ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால்,
அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் கொரோனா தொற்று
பரவாமல் தடுக்கவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் தடுக்க
மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட, சென்னை பெருநகர காவல்
அனைத்து சரகங்களிலும், காவல் அதிகாரிகள் தலைமையில் கொரோனா
விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, இன்று (15.4.2021) மாலை அடையார் மாவட்டம்
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை காவல் உதவி மையம் அருகில் காவல்துறை.
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் வர்த்தகர் சங்கம் சார்பில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த கொரோனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி மற்றும்
தடுப்பூசி முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார்
அகர்வால் அவர்கள் துவக்கி வைத்தும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு
ஸ்டிக்கர்ஸ் ஆட்டோக்களில் ஒட்டி ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி
முகக்கவசம் கிருமி நாசினி மற்றும் நோய் தடுப்பு பொருட்களை பொதுமக்களுக்கு
வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திரு.பரணிதரன் மருத்துவர் காவேரி மருத்துவமனை,
தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையாளர்.மருத்துவர்.திரு. N.கண்ணன்
இணை ஆணையர் (தெற்கு மண்டலம்) திருமதி.லக்ஷ்மி, இ.கா.ப., துணை
ஆணையர்கள் திரு.விக்ரமன்,(அடையார்), மருத்துவர்.தீபா சத்யன்,
போக்குவரத்து (தெற்கு), திரு. ஹரிகிரன் பிரசாத்,
(தியாகராய நகர்), முனைவர்.பிரபாகர், (புனித தோமையர் மலை) காவல்
அதிகாரிகள் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்
வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.