Today’s Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்

Loading

ஜோதிடம்
Today’s Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்

சென்னை: பிலவ வருடம் சித்திரை 01ஆம் தேதி ஏப்ரல் 14, 2021 புதன்கிழமை. துவிதியை திதி பகல் 10.17 மணி வரை அதன் பின் திருதியை. பரணி மாலை 06.22 மணிவரை அதன் பின் கிருத்திகை. சந்திரன் இன்றைய தினம் மேஷ ராசியில் பயணம் செய்கிறார் கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. தமிழ் புத்தாண்டு தினமான இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கவும்.

மேஷம்
சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று காலையிலே இனிய செய்தி வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். சிலருக்கு கல்வி சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உள்ளவர்களின் கருத்து வேறுப்பாட்டால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் ஏற்படும். திடீர் வருமானம் அதிகரிக்கும்.

கடகம்

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு 10ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் பெருமை சேரும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழ்வார்கள்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு 9ஆம் வீட்டில் பயணம் செய்வதால் நிறைய சந்தோச சம்பவங்கள் நடைபெறும்.

இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். நிறைய சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. இரவு நேர பயணங்களை தவிர்த்து விடவும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சிலருக்கு உத்தியோக ரீதியான பயணங்களால் நன்மை ஏற்படும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.

இன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு நல்ல நாள். பிள்ளைகள் அவர்களின் பொறுப்பறிந்து செயல்படுவர். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவுகள் நன்றாக இருக்கும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படும். கடன் வாங்க வேண்டியிருக்கும் கவனம் தேவை. பிள்ளைகளால் சந்தோஷம் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.

இன்று வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றத்தை காணலாம். நீண்ட நாட்களுக்கு முன்பு கொடுத்த கடன்கள் வசூலாகம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *