Today’s Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்
ஜோதிடம் இன்றைய ராசிபலன்கள் சென்னை: சார்வரி வருடம் பங்குனி 27ஆம் தேதி ஏப்ரல் 09, 2021 வெள்ளிக்கிழமை. திரயோதசி திதி மறுநாள் விடிகாலை 04.28 மணி வரை அதன் பின் சதுர்த்தசி திதி. பூரட்டாதி நட்சத்திரம் முழுநாள். சந்திரன் இன்றைய தினம் கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.
கடக
ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. சுக்கிரபகவான் ஆசி நிறைந்த வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தோடு ஆலய தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.
ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு 10 ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிட்டும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும் அதிக லாபம் கிடைக்கும். வங்கி சேமிப்பு உயரும்.
மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் இன்று பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்கலாம். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். சகோதர சகோதரிகள் வழியில் சாதகமான பலன் கிடைக்கும். சிலருக்கு ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு 8ஆம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.தொழில் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிட்டும்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். பிள்ளைகளால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் ஓரளவு சாதகமான பலன்கள் கிடைக்கும். பணப் பிரச்சனைகள் சற்று குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இளைய சகோதர வகையில் உதவி கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். மகரம் சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண சுப காரிய முயற்சிகள் தொடர்பாக பேசலாம். நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.
கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் குரு உடன் இணைந்து பயணம் செய்கிறார். இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். வீட்டிற்கு சொந்தங்களின் வருகையால் சந்தோஷம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினை தீரும். மீனம் சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் குரு உடன் இணைந்து பயணம் செய்கிறார். இன்று எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் வரும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் பொறுமையாக கையாளாவும் நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும் கடன் பிரச்சினை குறையும்.