Today’s Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்

Loading

சென்னை: சார்வரி வருடம் பங்குனி 25ஆம் தேதி ஏப்ரல் 07, 2021 புதன்கிழமை. ஏகாதசி திதி இரவு 02.29 மணிவரை அதன் பின் துவாதசி திதி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 03.33 மணி வரை அதன் பின் சதயம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் மகர ராசியிலும் கும்ப ராசியிலும் பயணம் செய்கிறார். மிதுன ராசிக்காரர்களுக்கும் கடக ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.

மேஷம்
சந்திரன் பயணம் சாதகமாக உள்ளது. இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். உற்றார் உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு சாதகமான இடத்தில் பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். சுப செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பயணங்களால் நன்மை நடைபெறும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு சாதகமில்லாத நிலையில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு பிற்பகல் வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். மன அமைதி உண்டாகும். இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பிற்பகல் வரை சாதகமான நிலையில் பயணம் செய்கிறார். பிற்பகலுக்கு மேல் சந்திராஷ்டமம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். எதிலும் நிதானம் வேண்டும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பண முதலீடுகளை தவிர்த்து விடவும் இரவு நேர பயணங்களை தவிர்த்து விடவும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு சாதகமான இடத்தில் பயணம் செய்கிறார். குருவின் பார்வையால் குதூகலமாக இருப்பீர்கள். இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும்.

கன்னி
சந்திரனின் பயணம் இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் எடுத்த காரியம் வெற்றியடையும். குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். வண்டி வாகனங்கள் பராமரிப்பிற்காக சிறு தொகை செலவு செய்வீர்கள். எடுத்த காரியம் வெற்றி அடைய மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் இருந்த போட்டி பொறாமைகள் ஓரளவு குறையும்.

துலாம்
இன்றைய தினம் நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். வேலையில் பணிசுமை குறையும். வங்கி சேமிப்பு உயரும். இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும். பொன் பொருள் சேரும்.

விருச்சிகம்
சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எடுத்த காரியம் வெற்றியடையும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் சாதகமான இடத்தில் பயணம் செய்வதால் பொருளாதாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நிதி பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை செய்யுமிடத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்கள் வழியாக அனுகூலப்பலன் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள்ளும் பிற்பகலுக்கு மேல் இரண்டாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் நுழைகிறார். நினைத்த காரியம் நிறைவேறும். பயணங்களால் நன்மை ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒத்துழைப்பு கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலப் பலன் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேற மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

0Shares

Leave a Reply