Today’s Rasi Palan: இன்றைய ராசிபலன்கள் – மார்ச் 27, 2021
சென்னை: சார்வரி வருடம் பங்குனி 14 ஆம் தேதி மார்ச் 27, 2021 சனிக்கிழமை. சதுர்த்தசி திதி இரவு 03.27 அதன் பின் பவுர்ணமி திதி பூரம் இரவு 07.51 மணிவரை அதன் பின் உத்திரம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. சனி பகவான் ஆசி நிறைந்த இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம் – சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். பெரியவர்கள் கூறும் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது நம்பிக்கையை கொடுக்கும்.
ரிஷபம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்களுக்கு மனதில் உற்சாகம் அதிகரிக்கும். இன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
கடகம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் சுப செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டா-கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்கள் துணை நிற்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். மன நிம்மதி அதிகரிக்கும்.
சிம்மம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்வதால் மனதில் சில சங்கடங்கள் ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்திருக்கவும். வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். உடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும். திடீர் பண வரவு வரும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.
கன்னி – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும் புதிய முயற்சிகளில் தாமதப் பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியால் ஓரளவு பிரச்சினைகள் குறையும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும்.
துலாம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். செய்யும் தொழிலில் நண்பர்களின் ஒத்துழைப்பால் நன்மைகள் நடைபெறும் வராத கடன் பழைய பாக்கிகள் வசூலாகும்.
விருச்சிகம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. போட்டி அதிகரிக்கும். சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.
தனுசு – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகலாம். சேமிப்பு குறையும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று விலகும். சிக்கனமுடன் செயல்பட்டால் கடன் பிரச்சினை குறையும்.
மகரம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.
கும்பம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
மீனம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் தேடி வரும். உறவினர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டு. மனமகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் மதிப்பு மரியாதை கூடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலை உயரும். கடன் பிரச்சினைகள் தீரும். பொன் பொருள் சேரும்.