நேமம் ஊராட்சியில் உள்ள குளிர்பான தொழிற்சாலையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி : மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் ஏற்றுக் கொண்டனர்
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நேமம் ஊராட்சியில் உள்ள தனியார் குளிர்பான தொழிற்சாலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, 100 சதவிகித வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பா.பொன்னையா தலைமை தாங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நேமம் ஊராட்சியில் உள்ள தனியார் குளிர்பான தொழிற்சாலையில் 100 சதவிகித வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில்,“100% VOTE” என்ற வாசக வடிவில் அந்நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்கள் நின்று வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். பின்னர், வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பா.பொன்னையா கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து தொழிற்சாலை பிரிநிதிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், தொழிற்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடியில் தொழிற்சாலை பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்கள் மாதிரி வாக்குப்பதிவில் ஈடுபட்டு விழிப்புணர்வு அடைந்தனர்.
இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தூர்பாண்டி, தனியார் குளிர்பான தொழிற்சாலை பிரதிநிதிகள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.