ஒட்டன்சத்திரத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொழிற்பேட்டை அமைத்து தரப்படும்.

Loading

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடும் அர. சக்கரபாணி அவர்கள் இன்று காலையில், ஜீவா நகர், விருப்பாச்சி, பாரதிநகர், சாமியார் புதூர், சின்ன கரட்டுப்பட்டி, இந்திரா நகர் வாய்க்கால் பாலம், சமத்துவபுரம், ஸ்டாலின் நகர், ரெட்டியபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது பொதுமக்களிடம் பேசியபோது மே.2ல் தளபதி தலைமையிலான ஆட்சி அமையும்போது ஒட்டன்சத்திரம் பகுதியில் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஒட்டன்சத்திரம் பகுதியில் சிப்காட் போன்ற தொழிற்பேட்டைகள் அமைத்து தரப்படும் எனவும், தற்போது உள்ள அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்கள் மேல் சிகிச்சைக்காக கோவை,மதுரை போன்ற வெளியூருக்கு செல்லாமல் இங்கேயே அனைத்து சிகிச்சைகளும் பார்க்கும் வகையில் மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் எனவும், ஒட்டன்சத்திரத்தில் அதிகளவு சாகுபடி செய்யும் முருங்கை களை முருங்கை பொடி, தக்காளிச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை ஏற்படுத்தப்படும் எனவும், திண்டுக்கல் மாவட்டம் உள்பட 9 மாவட்டங்களில் விளைகின்ற செங்காந்தள் மலரின் விதையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், மற்றும் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை முன்னிறுத்தி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,

மேலும் வாக்கு சேகரிப்பில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, நகரக் கழகச் செயலாளர் வெள்ளைச்சாமி, உள்ளிட்ட தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply