தமிழக சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வீடியோ பதிவு செய்யும் பணியிணை தொழில் முறை வீடியோ கலைஞர்களுக்கு வழங்காததை கண்டித்து கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம்.
கன்னியாகுமரி:-
தமிழக சட்டசபை தேர்தலில் 3 கோடி ரூபாய் ஒப்பந்த வீடியோ பதிவு செய்யும் உரிமையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்த தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோ மற்றும் புகைப்பட தொழில் நிறுவனங்கள் அடைப்பு. வீடியோ கலைஞர்கள் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் கூறுவதாவது :- தமிழகத்தில் சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் தொடர்பான காட்சிகளை வீடியோ எடுக்கும் உரிமையை குறைந்தபட்சம் 3 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் செய்யும் வீடியோ நிறுவனங்களுக்கு மட்டுமே உரிமை என்ற புதிய நிபந்தனையால் தமிழகத்தில் வீடியோ கிராபர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் தேர்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் பங்கேற்க இயலாமல் போனது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவு வீடியோ கலைஞர்களை மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது. இனி வருங்காலங்களில் இதுபோன்ற விதிமுறைகளை தளர்த்தி தமிழக வீடியோ கலைஞர்களுக்கு வீடியோ எடுக்கும் உரிமையை அளிக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் வரும் ஓட்டுபதிவு நடக்கும் நேரத்தில் அணைத்து கலைஞர்களும் அதை புறங்கணிப்போம் என்று கூறினார்கள். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோ மற்றும் புகைப்பட நிறுவனங்கள் அடைக்கப்பட்டு வேலை நிறுத்தத்தில் வீடியோ கலைஞர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் வீடியோ கலைஞர்கள் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுவரொட்டிகளை கையில் ஏந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.