கெங்கவல்லி தேர்தல் பிரச்சாரத்தில் தி. மு. க வேட்பாளர் உறுதி

Loading

சேலம் மாவட்டம் கெங்கவல்லி (தனி) சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் நேற்று அவர் கெங்கவல்லி தாலுகாவிற்க்கு உட்பட்ட ஒதியத்தூர் ,நடுவலூர் ,தெடாவூர் ஆணையம் பட்டி, கெங்கவல்லி ஆகிய ஊராட்சிகளில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் நேரில் சந்தித்தனர் மேலும் அனைத்து ஊராட்சிகளிலும் நேரடியாக சென்று ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர் அப்பொழுது அவருக்கு அந்த பகுதியில் உள்ள பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது ரேகா பிரியதர்ஷினி பேசும்பொழுது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை வைத்துள்ளனர் இந்த பகுதியில் காட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், கெங்கவல்லியில் அரசு செவிலியர் கல்லூரி தொடங்கப்படும் , தலைவாசல் -கெங்கவல்லி நீர்ப்பாசன வசதிகளை பொருத்துவதற்கு மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை கொண்டுவரப்படும் ,தலைவாசல் – கெங்கவல்லியில் பேருந்து நிலையங்கள் நவீன முறையில் விரிவுபடுத்தப்படும், தலைவாசல்- வீரகனூரில் பால் பாதனிடும் தொழிற்சாலை அமைக்கப்படும் , வீரகனூரில் விலங்குகள் தீவன தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படும், கெங்கவல்லி தொகுதியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி துவக்கப்படும், தலைவாசல் முதல் ஊனத்தூர் வரை ஊர் தார்சாலை விரிவுபடுத்தப்படும் ,தம்மம்பட்டி அருகே சேரடி அணைக்கட்டும் திட்டம், நாவக்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையமாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் . ஆகியவை தொகுதி மக்கள் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க படும்போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு உங்கள் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன் என்றார் .
தி .மு .க தேர்தல் பிரச்சாரத்தில் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று கூறினார். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து நிறைவேற்றப்படும். பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு என்று பக்கபலமாக இருக்கும் ஒரே கட்சி தி.மு.க கட்சி என்றார்.
கெங்கவல்லி தொகுதி பொறுப்பாளர் முன்னாள்
எம்.எல்.ஏ .கோபால், தலைவாசல் ஒன்றிய பொறுப்பாளர் மணி உட்பட
தி.மு.க,காங்கிரஸ், விடுதலை சிறுத்தை மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து முக்கிய நிர்வாகிகளும் வாக்கு சேகரிக்கும் போது கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *