கொரோனா காலகட்டத்திலும் 60000 கோடி ரூபாய் தொழில்களை ஈர்த்த ஒரே மாநிலம் தமிழகம் – ஒசூரில் இபிஎஸ் பெருமிதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி இராயக்கோட்டை சந்திப்பு சாலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரசாரம் மேற்க்கொண்டார்
ஒசூர் அதிமுக வேட்பாளர் திருமதி ஜோதி பாலகிருஷ்ணரெட்டி மற்றும் தளி தொகுதியில் பாஜக வேட்பாளர் நாகேஷ் குமார் அவர்களை ஆதரித்து வாக்குகளை சேகரித்த தமிழக முதல்வர் கூட்டத்தில் பேசுகையில்:
தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் அதிகப்படியான தொழில்களை தமிழகம் ஈர்த்துள்ளது..
திமுக ஆட்சியில் தொடர் மின்வெட்டு காரணமாக ஒசூர் பகுதியில் உள்ள சிறு,குறு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன.. தொழிலாளர்கள் வேலையை இழந்தனர். அப்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் மின்வெட்டு பிரச்சனை தீர்ப்பதாக உறுதியளித்த ஜெயலலிதா, அதை மூன்று ஆண்டுகளை செய்து முடித்து மின்மிகை மாநிலமாக உருவாக்கினார்..
மின்வெட்டு பிரச்சனை தீர்க்கப்பட்டதால் தொழில்கள் குவிந்தன, மீண்டும் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்றனர்..
ஒசூர் என்பது தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று என்பதால் இங்கு, சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்பட்டு வருகிறது.. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று 20 ஏக்கர்களில் காய்கறி மார்க்கெட் அமைக்கப்படும், ஒசூர் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும் மேலும் பல திட்டங்களை மேற்க்கொள்ள அதிமுகவை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர்,
கொரோனா காலகட்டத்திலும் கூட இந்தியாவிலேயே 60000 கோடி ரூபாய்க்கு தொழில்களை ஈர்த்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரே மாநிலம் தமிழகம் என பெருமை தெரிவித்தார்…
புதிய தொழில்கள் மூலம் ஒன்றரை லட்சம் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்