கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரபல கல்லூரி முதல்வருக்கு கொரோனா பாதிப்பு. கல்லூரி ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை..
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த செட்டிகுளம் பகுதியில் இந்து கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் முதல்வர் சிவதாணுபிள்ளை (56) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கல்லூரியில் உள்ள சுமார் 65 பேராசிரியைகளுக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 2 ஆயிரம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் சமூக இடைவெளி கடைபிபிக்காமலும் முககவசம் அணியாமலும் கல்லூரிக்கு வந்து செல்வதால் மாணவ மாணவிகளுக்கும் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லூரியில் முதல்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து கல்லூரி கட்டிடங்கள் மற்றும் வளாகம் முழுவதும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து சமூக அர்வலர்கள் கூறுகையில் குமரியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்களில் படிக்க வரும் மாணவ மாணவிகள் முககவசம் அணிவதோ இடைவெளி பின்பற்றுவதோ இல்லை இதனை மாவட்ட நிர்வாகமோ அதிகாரிகளோ கண்டுகொள்வதில்லை. கல்லூரிகள் முடிந்து விட்டு வீட்டுக்கு திரும்பும் வேளையில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கூட்டம் கூட்டமாக முகக்கவசம் அணியாமலும் இடை வெளி பின்பற்றாமலும் செல்கின்றனர். மீண்டும் கொரோனா அதிகமாகி கொண்டிருக்கும் வேலையில் மாநில அரசாங்கம் பல கட்டுப்பாடுகள் கொண்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் கல்லூரி மற்றும் பள்ளிகளை படிக்க வரும் மாணவ மாணவியருக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதனை பின்பற்றவும் பள்ளி கல்லூரிகளுக்கு அறிவுறுத்தி மாவட்ட நிர்வாகம் அதனை தொடந்து கண்காணிக்க வேண்டும் எனவும் கூறினார்…..