ஒட்டன்சத்திரத்தில் பா.ஜா.க மற்றும் இந்து முன்னனி சார்பில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

Loading

ஒட்டன்சத்திரத்தில் பா.ஜா.க மற்றும் இந்து முன்னனி சார்பில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்.பி.நடராஜ் அறிமுகக் கூட்டம் பா.ஜ.க. இந்து முன்னனி சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக வேட்பாளர் என்.பி.நடராஜ் பேசுகயில் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் மாண்புகளை பற்றி எடுத்துரைத்தார் மேலும் அவர் கூறியதாவது நடைபெற உள்ள தேர்தலில் திமுக வேட்பாளரை எவ்வாறு தோற்கடிப்பது, பொதுமக்களிடையே அதிமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து இரவு பகல் பாராமல் தேர்தல் பணி செய்து 25 ஆண்டு கால திமுக சட்டமன்ற உறுப்பினரை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுமாறு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட இந்து முன்னனி இளைஞர்கள், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *