திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டராக்ட் சங்கம் இசுலாமியா கல்லூரி பதவியேற்பு மற்றும் இரத்ததானம் முகாம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டராக்ட் சங்கம் இசுலாமியா கல்லூரி பதவியேற்பு மற்றும் இரத்ததானம் முகாம் 11-03-2021 வியாழக்கிழமை அன்று சங்க தலைவர் Rtn.Dr.பரான் சவுத் MBBS DO தலைமையில் வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் நடைபெற்றது. இந்த சிறப்பான நிகழ்வில் ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் Dr.பிலால்அகமத் அனைவரையும் வரவேற்றார் கல்லூரி முதல்வர் Dr.Md இலியாஸ் மற்றும் உயிர் வேதியியல் துறை தலைவர் Dr.லியாகத்அலி சங்க செயலாளர் Rtn.Dr.G.அறிவழகன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் சங்க உறுப்பினர்கள் Rtn.A.அருண்குமார் Rtn.கலைமணி Rtn.தில்ஷாத் பேகம் Rtn.நிகாநந்தன் Rtn.Dr.பார்திபன் அரசு மருத்துவர் ,இரத்தவங்கி பொறுப்பாளர் Dr.தன்வீர்அகமத் கலந்துகொண்டு இரத்தானம் பற்றி பேசினார். கல்லூரி செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்கள் Dr.கோகுலகிருஷ்ணன் Dr.பாரூக் நிகழ்ச்சி ஒருங்கிணைத்தார்கள்.
கல்லூரி பேராசிரியர் யாசிர்அராபத் பேரா.அஜீஸ் ,பேரா.ஹரி , பேரா.அஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர் .கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு 80 யூனிட் இரத்தம் வழங்கினார்கள்.ரோட்டரி சங்க மேனாள் தலைவர் Rtn.PHF.DR.G.சக்கரவர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.நிகழ்ச்சி முடிவில் நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.முஜிபூர் ரகுமான் நன்றி கூறினார்.