திண்டுக்கல் திருவிழா மற்றும் கோவை எம் மீடியா இணைந்து நடத்திய சாதனை பெண் விருதுகள் 2021 நிகழ்ச்சி
திண்டுக்கல் திருவிழா மற்றும் கோவை எம் மீடியா இணைந்து நடத்திய சாதனை பெண் விருதுகள் 2021 நிகழ்ச்சியில் லயன்.டாக்டர். எஸ்.லலிதா அவர்களுக்கு சமூக நல ஆர்வலர் விருது வழங்கப்பட்டது.
திண்டுக்கல் திருவிழா மற்றும் கோவை எம் மீடியா இணைந்து நடத்திய சாதனை பெண் விருதுகள் 2021 நிகழ்ச்சியில் திண்டுக்கல் மதர் தெரசா நர்சிங் கல்லூரியின் தாளாளரும் ,சுபம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான லயன்.டாக்டர்.எஸ்.லலிதா அவர்களுக்கு சமூக நல ஆர்வலர் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக விஜய் டிவி கலக்கப்போவது யாரு ஹானஸ்ட்ராஜ், நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமிசெந்தில் குமார், மெர்சி பவுண்டேசன் நிறுவனர் மெர்சி செந்தில்குமார், டாக்டர்.அமலா தேவி மற்றும் பல முன்னணி தொழிலதிபர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். சமூக நல ஆர்வலர் விருது பெற்ற லயன் .டாக்டர்.எஸ்.லலிதா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில் சமுதாயம் வளர வேண்டுமெனில் பெண் கல்வி மிகவும் அவசியம் என்பதனை வலியுறுத்தி தமது மதர் தெரசா நர்சிங் கல்லூரியில் இலவச கல்வி அளிப்பதாகவும் , இலவச கல்வி பெற விரும்புவோர் 8610042061 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும்படியும் கூறினார் . பின்னர் விருது பெற்ற அனைத்து மகளிருக்கும், இனிவரும் காலங்களில் விருது பெற காத்திருக்கும் அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை கூறினார்.