கன்னியாகுமரி மாவட்டத்தில் சுவர் விளம்பரம் எழுத அனுமதிக்க வேண்டும்….. குமரி மாவட்ட ஓவியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்…
கன்னியாகுமரி :- அடுத்த மாதம் 6ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாராளுமன்ற தொகுதி இடைத் தேர்தலும் சேர்ந்து நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான அரசியல் விளம்பரங்கள் எழுதக்கூடாது என்று அரசு அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் ஊராட்சி பகுதிகளில் தேர்தல் விளம்பரம் எழுதப்பட்டு வருகிறது சமீப காலமாக எந்தவித பணிகளும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள ஓவியர்கள். அதிகாரிகளின் இந்த அறிவிப்பால் மேலும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே தமிழகம் முழுவதும் அனுமதி இருக்கும் நிலையில் மற்ற மாவட்டங்களை போல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஊராட்சி பகுதிகளில் தேர்தல் விளம்பரங்களை எழுத அனுமதிக்க வேண்டும் தொழில் இழந்த நிலையில் இருக்கும் 500க்கும் அதிகமான ஓவிய குடும்பங்களுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் வலியுறுத்தினர்..