சென்னை கோயம்பேட்டில் தொழிலாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டது.
சென்னை கோயம்பேட்டில் தொழிலாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இணைந்து கோயம்பேட்டில் உள்ள சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி முகாம் கோயம்பேட்டில் உள்ள அம்மா மினி கிளினிகில் துவங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் அவர்கள் கலந்துகொண்டு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்
கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் தொடங்கி உள்ளதால் அனைவரும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும்
பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழுவில் மூலம் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
பொதுமக்கள் கொரோனா தடுப்பு ஊசி, முக கவசம் சமூக இடைவெளியை கடைபிடித்தாலே கொரோனா வில் இருந்து முற்றிலும் விடுபடலாம் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா மற்றும் ஜி.டி.ராஜாசேகரன் அவர்களும் மற்றும் வணிகர் சங்க பேரமைப்பு மாநில நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்