Today’s Rasi Palan: இன்றைய ராசிபலன்கள் – மார்ச் 10, 2021

Loading

சென்னை: சார்வரி வருடம் மாசி 26ஆம் தேதி மார்ச் 10, 2021 புதன்கிழமை. துவாதசி திதி பகல் 02.40 மணிவரை அதன் பின் திரயோதசி திதி. திருவோணம் நட்சத்திரம் இரவு 09.02 மணிவரை அதன் பின் அவிட்டம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் மகர ராசியில் திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. புதன்பகவான் ஆசி நிறைந்த புதன்கிழமை மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்கு என்ன பலன் நடைபெறும் என்று பார்க்கலாம்.

மேஷம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். திடீரென்று சுபசெய்திகள் தேடி வரும். சகோதர, சகோதரிகளின் உதவி கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். லாபம் அதிகரிக்கும் சேமிப்பு உயரும்.

ரிஷபம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

மிதுனம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். முதலீடுகளில் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடவும். வாகன போக்குவரத்தை கவனம் தேவை.

கடகம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். நான்கு கிரகங்களின் பார்வை உங்கள் ராசிக்க கிடைக்கிறது. இன்று உங்களுடைய குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம் – சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும்.

கன்னி – சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். வண்டி வாகனங்கள் பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். எடுத்த காரியம் வெற்றி அடைய மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் ஓரளவு குறையும். கடன் பிரச்சினைகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.

துலாம் – சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். வேலையில் பணிசுமை குறையும். வங்கி சேமிப்பு உயரும். இன்றைய தினம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சுகமான நாளாக அமையப்போகிறது.

விருச்சிகம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வேலையில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்பட்டு மன உளைச்சலை உண்டாக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக அனுகூலப்பலன் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.

மகரம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். நான்கு கிரகங்கள் உங்கள் ராசியில் இணைந்துள்ளன. இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆன்மீக பயணங்கள் ஆலய தரிசனம் செய்யலாம்.

கும்பம் – சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மீனம் – சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் நன்மைகள் ஏற்படும். தடைகளை தாண்டி முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *