வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.பி.உமாமகேஸ்வரி துவக்கி வைத்தார்கள்.
வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எல்.பாலாஜி சரவணன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.உடன் புதுக்கோட்டை கோட்டாட்சியர் டெய்சிகுமார், துணை ஆட்சியர் (பயிற்சி) சுகிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ்ராஜ், நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன், வட்டாட்சியர் முருகப்பன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளனர்