Today’s Rasi Palan: இன்றைய ராசிபலன்கள் – மார்ச் 8, 2021
சென்னை: சார்வரி வருடம் மாசி 24ஆம் தேதி மார்ச் 8, 2021 திங்கட்க்கிழமை. தசமி திதி மாலை 03.45 மணிவரை அதன் பின் ஏகாதசி திதி. பூராடம் நட்சத்திரம் இரவு 08.40 மணிவரை அதன் பின் உத்திராடம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் தனுசு ராசியில் பயணம் செய்கிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களில் தடை வரும் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களை பார்க்கலாம்.
மேஷம் – சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். வண்டி வாகனங்களை பராமரிப்பு செய்யும் செலவு வரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
ரிஷபம் – சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் கவனமாகவும் செல்ல வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். பண முதலீடுகளை தவிர்த்து விடவும்.
மிதுனம் – சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் புதிய முயற்சியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு முன்னேற்றம் ஏற்படும். வேலையில் இடமாற்றமும் சந்தோஷமும் ஏற்படும்.
கடகம் – சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இன்று நீங்கள் கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். பணப்பிரச்சினை தீரும் கடன்கள் அடைபடும்.
சிம்மம் – சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையாக பொருட் சேர்க்கை உண்டாகும்.
கன்னி – சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சுகமும் சந்தோஷம் உண்டாகும். வேலை விஷயமாக செல்லும் வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.
துலாம் – சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை விசயமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் வேலைபளு குறையும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
விருச்சிகம் – சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உறவினர்கள் மூலம் உதவிகள் தேடி வரும்.
தனுசு – சந்திரன் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் திடீர் தடைகளும் இடையூறுகளும் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
மகரம் – சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் மூலம் சுப செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். திடீர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடன் பிறந்தவர்கள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
கும்பம் – சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வேலை செய்யும் இடத்தில் புரமோசனுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு தேடி வரும்.
மீனம் – சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உற்றார் உறவினர்களால் நன்மை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை மேலோங்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். சுப விரைய செலவுகள் வரும்.