‘வேதா பேரவை’ – தமிழகத்தில் புதிய கட்சி உதயம்
‘வேதா பேரவை’ – தமிழகத்தில் புதிய கட்சி உதயம்:
தமிழகத்தில் ‘வேதா பேரவை’ என்னும் பெயரில் புதிய அரசியல் கட்சியை டாக்டர் வேதா துவக்கினார். துவக்கப்பட்ட இந்த கட்சி வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதியிலும், பாண்டிச்சேரியில் 30 தொகுதியிலும் தனித்து போட்டியிட உள்ளது. டாக்டர் வேதா பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் உறவினரும் என்பது குறிப்பிட்டதக்கது
இவர் தமிழகத்திற்கு இடையூறு விளைவிக்கும் பல்வேறு பிரச்சினைகளை வெளி உலகிற்கு கொண்டு வந்தவர் ஆவார். 2ஜி ஸ்பெக்ட்ரம், சிஏஜி ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பான வழக்கு மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் வழக்கு உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக பல நீதிமன்றங்களில் பொது நல வழக்கு தொடர்ந்து போராடி வருகிறார்.
புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புள்ளிவிவர மற்றும் கொள்கை ஆராய்ச்சி அமைப்பான மைக்ரோஸ்டேட்டின் ஆசிரியராக இருக்கிறார். இவரது சமூக சேவையை பாராட்டி இவருக்கு 2005-ம் ஆண்டு அன்னை தெரசா விருது தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர் 1993-ம் ஆண்டு புதுடெல்லியில் நடந்த அகில இந்திய பொது அறிவுத் தேர்வு போட்டியில் யுனிசெப் விருதையும் வென்றுள்ளார். பொது மக்கள் மூலம் வழங்கப்பட்ட 80 கோடி மதிப்பிலான நன்கொடை தொகையைக் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள 174 கோவில்களை சீரமைக்க இவர் உதவி உள்ளார். மாநிலத்தில் சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் கல்வி வழங்கும் பல்வேறு நபர்களை இவர் ஆதரித்து சேவை புரிந்து வருகிறார்.