பள்ளிபாளையம் ஓம் காளியம்மன் கோவில் திருவிழா …
பள்ளிபாளையம் ஓம் காளியம்மன் கோவில் திருவிழா
பள்ளிபாளையம் மார்ச் 05
கன்னிமார் சுவாமிகள் தீர்த்தக்குடம், அன்னதானம், வானவேடிக்கை நிகழ்ச்சி பள்ளிபாளையம் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தின் சார்பில் நடைபெற்றது அருள்மிகு ஸ்ரீ ஓம்காளியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று 5.3.2021 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு சமூகத்தில் உள்ள 7 கோத்திரத்தில் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒருவரை தேர்ந்தெடுத்து மொத்தமுள்ள 7 கோத்திரத்தில் ஏழு பெண் குழந்தைகளை (கன்னிமார்கள் சுவாமிகள்) தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மஞ்சள் புத்தாடைகளை வழங்கி அவர்களை ஊர்வலமாக அழைத்து வந்து கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதியம் 1ஒரு மணிக்கு “ஸ்ரீ ஓம் காளியம்மன் சிட்பண்ட்ஸ்” நண்பர்கள் சார்பில் 18ஆம் ஆண்டு வெற்றி படைப்பாக மாபெரும் பிரம்மாண்ட அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்ந்து இரவு 8 மணிக்கு நாதஸ்வர நிகழ்ச்சியுடன் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மிக சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து இளைஞரணி சார்பாக இரண்டாமாண்டு வெற்றி படைப்பாக பிரம்மாண்டமான கண்கவரும் இரவை பகலாக்கும் வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது இந்நிகழ்ச்சியோடு நாதஸ்வர நிகழ்ச்சியும்,தாசா,பேண்ட் வாத்தியம், போன்ற இசைக்கருவிகளுடன் வாத்தியங்களுடன் சாமி சிறப்பாக திருவீதி உலா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியார்கள் மற்றும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தினர் செய்திருந்தனர்.