திருவள்ளூர் அடுத்த சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் ஆதரவற்ற முதியோர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி :
திருவள்ளுர் மார்ச் 04 : திருவள்ளூர் மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனை, திருத்தணி அரசு மருத்துவமனை உள்ளிட்ட வட்டார சுகாதார மையம் என 17 மையங்களில் 3-ம் கட்ட முகாமில் 45 வயதிற்கு மேற்பட்ட 59 வயதிற்குட்பட்ட சக்கரை வியாதி , இரத்தக் கொதிப்பு போன்ற இணை நோயாளிகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி திருவள்ளூர் அடுத்த கசுவா கிராமத்தில்அமைந்துள்ள சேவாலயா தொண்டு நிறுவனத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உத்தரவின் பெயரில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் மருத்துவர் ஜவஹர்லால் அறிவுரையின் படி 60 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற 70 முதியோர்களுக்கு அரசு வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் கோவிட் 19 தடுப்பூசி போடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் யுவராஜ் தலைமை தாங்கினார்.
இப்பணியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குமார், மருத்துவ ஆய்வாளர் ஞானசேகரன், மருத்துவ அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பணியாளார்கள் ஈடுபட்டனர்.இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சேவாலயா தொண்டு நிறுவனர் முரளிதரன் சிறப்பாக ஏற்பாடு செய்தார்.