மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் 100%வாக்களிக்க விழிப்புணர்வு……….

Loading

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் மார்ச் 3ஆம் தேதி மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி . மாவட்ட தேர்தல் அலுவலர் ,மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி, திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் வெற்றிவேல், திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி , மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், துணை ஆட்சியர் (பயிற்சி )அஜிதா பேகம், தேர்தல் அலுவலர்கள், பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் குழு உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர், பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது. திருவண்ணாமலை மாவட்டத்தில்ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 10% வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்காளர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது, மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 27,000 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளன மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எளிதில் வாக்களிப்பதற்காக சாய்வு தளம் வசதி, சிறப்பு சக்கர நாற்காலி தன்னார்வலர்கள், பிரெய்லி வாக்குச்சீட்டு பிரெய்லிஅடையாளம் உட்பட அனைத்து வசதிகளும் செயல்பட்டு வருகிறது, மேலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் 100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டு இன்று முதல் அனைத்து பகுதிகளிலும் திரையிட்டு காட்டுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்,,

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *