கோவை வீரர்கள் அசத்தல் வெற்றி!!!

Loading

கோவை வீரர்கள் அசத்தல் வெற்றி!!!

திருச்சியில் நடந்த மாநில அளவிலான கூடோ போட்டியில் கோவை வீரர்கள் அசத்தல் வெற்றி பெற்றனர்.

திருச்சி தமிழ்நாடு மாநில கூடோ அசோசியேசன் சார்பில் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான கூடோ போட்டி ஜனவரி 27, 28, 2021ல் ஆகிய தினங்களில் திருச்சி நேஷனல் காலேஜ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது, அதில் நாமக்கல், சேலம், சென்னை, தஞ்சாவூர், கோவை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 300 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர், 10, 14,18, 21 வயதிற்கு மேற்பட்டோர் என பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது, அதில் கோவை பிரேம் எம் எம் ஏ அகடமி சார்பில் 12 வீரர்கள் பங்கேற்றனர்,
10 வயதிற்கு உட்பட்ட பிரிவி ஹனீஷ், பிரசன்னா 16, முதல் 21 பிரிவில் சபரிஸ், மணிகண்டன், இஸ்ரேல் ஜபகுமார், அனஸ்வர் பாபு, ஆதித்யன், 21,முதல் 31 டிபின், விவேகானந்தன் தருண்குமார்,தேவ கிரிஸ்டி, தீப்திகா, ஆகிய 12 வீரர்களும் தங்கப்பதக்கத்தை பெற்றனர் முதலிடத்தை பெற்றனர். ஓவர் ஆல் கோப்பையை கோயம்புத்தூர் மாவட்டம் மூன்றாம் இடத்தை பிடித்தது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி பைசல் ரகுமான், பிரேம்குமார் மற்றும் சதீஷ்குமார் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்..

0Shares

Leave a Reply