Today’s Rasi Palan: இன்றைய ராசிபலன்கள் – மார்ச் 2, 2021

Loading

சென்னை: சார்வரி வருடம் மாசி 18 ஆம் தேதி மார்ச் 2, 2021 செவ்வாய்க்கிழமை. சதுர்த்தி திதி இரவு 02.59 மணிவரை அதன் பின் பஞ்சமி திதி. சித்திரை நட்சத்திரம் இரவு 03.29 மணிவரை அதன் பின் சுவாதி நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் கன்னி ராசியிலும் துலாம் ராசியிலும் பயணம் செய்கிறார். இன்றைய தினம் கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.

மேஷம்:
சந்திரன் உங்களுடைய ராசிக்கு சாதகமான இடத்தில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்:
சந்திரன் சஞ்சாரத்தினால் இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.

மிதுனம்:
சந்திரன் இன்றைய தினம் சாதகமான பலனை தருவார். இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன் உண்டாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கடகம்:
சந்திரன் இன்றைய தினம் மனதில் சந்தோஷத்தை அதிகரிப்பார். இன்று உங்களுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். பண்டிகை கால வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

சிம்மம்:
சந்திரன் சஞ்சாரம் மனதில் உற்சாகத்தை அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.

கன்னி:
கடந்த இரண்டு நாட்களாக மனதில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். இன்று தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

துலாம்:
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு வந்திருக்கிறார். இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெறலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.

விருச்சிகம்:
சந்திரன் சஞ்சாரத்தினால் திடீர் செலவுகள் வரும். இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் மேலோங்கும்.

தனுசு:
சந்திரன் சஞ்சாரத்தினால் இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.

மகரம்:
சந்திரன் சஞ்சாரத்தினால் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

கும்பம்:
சந்திரன் இன்றைய தினம் மாலை 4.30 மணிவரை எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். மாலை வரை உங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பேச்சில் கவனம் தேவை. மாலை வரை பெரிய அளவில் முதலீடுகளை தவிர்க்கவும். மாலைக்கு மேல் பயணங்களால் நன்மைகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

மீனம்:
சந்திரன் சஞ்சாரத்தினால் உங்கள் ராசிக்கு சில சங்கடங்கள் வரலாம். இன்று மாலை 4.30 மணிக்கு மேல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. இரவு நேரத்தில் வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *