சென்னையில் புதிய டீலரை நியமித்து, விற்பனை மற்றும் சேவைப் பணிகளைத் தொடங்கியது, வால்வோ கார்

Loading

சென்னையில் புதிய டீலரை நியமித்து, விற்பனை மற்றும் சேவைப் பணிகளைத் தொடங்கியது, வால்வோ கார்

சென்னை, பிப்ரவரி 24, 2021
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சொகுசு வாகனத் தயாரிப்பாளரான வால்வோ கார் இந்தியா சென்னையில் பிராக்கார் ஆட்டோமோட்டிவ் என்ற நிறுவனத்தை புதிய டீலராக நியமித்து, விற்பனை மற்றும் சர்வீஸ் சேவைகளைத் தொடங்கியது.

சொகுசு பயண வாகன விற்பனையில் சென்னை தற்போது ஆற்றிவரும் பங்கு மற்றும் இவ்வகை வாகனங்களை வாங்க இங்குள்ள மக்களிடையே அதிகரித்துள்ள ஆர்வம் போன்றவை இந்தப் புதிய டீலர்ஷிப் நியமனத்தின் மூலம் உறுதியாகிறது. குறிப்பாக, தென்னிந்திய மக்களிடையே இவ்வித சொகுசு வாகனங்கள் குறித்து அதிகரித்துள்ள கவனம் இதன்மூலம் வெளிப்படுகிறது. தற்போது சென்னையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய டீலர்ஷிப் அலுவலகத்தை, வால்வோ கார் இந்தியாவின் மேலாண் இயக்குனர் திரு. சார்லஸ் ஃப்ரம்ப் (பிப்ரவரி 24 அன்று) முறைப்படி திறந்து வைத்தார்.

சுரங்கம், வாகன விற்பனை, சரக்குப் போக்குவரத்து, பொறியியல் போன்ற பல துறைகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஒரு குழுமம்தான் தற்போது வால்வோ தமிழ்நாடு பிரிவுக்கும் டீலர்ஷிப் உரிமைபெற்று, அதைச் சென்னையில் தொடங்க முன்வந்துள்ளது. கடந்த காலங்களிலும் இந்நிறுவனம், இதுபோன்ற முன்னோடி முயற்சிகள் பலவற்றில் ஈடுபட்டு, அதில் வெற்றி கண்டுள்ளது. வாடிக்கையாளர் சேவை, சமூகப் பொறுப்புணர்வு, உன்னத செயல்பாடு, நிறுவனத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் போன்ற விஷயங்களில் தொடர் கவனம் செலுத்தி, அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதில் இக்குழுமம் பெயர்பெற்றது.

சென்னையில் வால்வோ வாகன விற்பனையகத்தைத் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அதன் இந்தியப் பிரிவு மேலாண் இயக்குனர் திரு சார்லஸ் ஃப்ரம்ப், “இந்தியாவில் சென்னை ஒரு மிக முக்கியமான சந்தை ஆகும். காரணம் – வேகமாக வளர்ச்சி கண்டுவரும் மெட்ரோ நகரங்களில் இது முக்கிய இடம் பெற்றிருப்பதோடு, முன்னேறத் துடிக்கும் முனைப்புடன், வசதியான வாழ்க்கையை விரும்பும் குடும்பங்களை அதிகம் கொண்ட நகரமாகவும் இது உள்ளது. எங்களது புதிய விற்பனையகத்தை இங்கே தொடங்குவதன் மூலம் ஒரு வளரும் சந்தையை எங்களால் எளிதில் எட்ட முடியும் என்பதோடு, நீண்ட காலத்திற்கு தொடரும் பாதுகாப்பான சொகுசுப் பயணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற எங்களது நோக்கத்தை இந்தியாவில் திருப்திகரமாக நிறைவு செய்யவும் உதவும். சமூகத்தின் உயர்நிலையில் தனது வாடிக்கையாளர்களுக்கு, தற்போது சந்தையில் கிடைப்பதிலேயே சிறந்த அனுபவத்தை வழங்க வேண்டும்… அது ஒட்டுமொத்த பயண காலத்திற்கும் தொடர வேண்டும் என்பதில் வால்வோ கார் நிறுவனம் எப்போதுமே தீவிர அக்கறை கொண்டிருக்கும். எங்களது இந்த நோக்கத்தை நிறைவு செய்ய வால்வோ தமிழ்நாடு உதவும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” எனத் தெரிவித்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *