மத்திய பட்டு வாரியம் சேலம் மற்றும் பட்டுவளர்ச்சி துறை, தமிழக அரசு இவை இரண்டும் இணைந்து பட்டு விவசாயிகள் விழா மற்றும் கருத்துப் பட்டறை…

Loading

மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம்,மத்திய பட்டு வாரியம் சேலம் மற்றும் பட்டுவளர்ச்சி துறை, தமிழக அரசு இவை இரண்டும் இணைந்து பட்டு விவசாயிகள் விழா மற்றும் கருத்துப் பட்டறை,ஓசூர்,லிங்காபுரம் கிராமம் RVM திருமண மஹாலில் 19-02-2021 அன்று முனைவர் தாஹிரா. விஞ்ஞானி-D மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சேலம், அனைவரையும் வரவேற்றார். விழாவில் டாக்டர் T.G.வினய்,இயக்குநர் பட்டு வளர்ச்சித் துறை சேலம் அவர்கள் தேவை ரீதியிலான பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டார் அவர் தனது தலைமையுரையில் பட்டு உற்பத்தியில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார் மேலும் பட்டு விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து பட்டுக்கூடு உற்பத்தி செய்து வருமானம் பெற வாழ்த்தினார். பயணிகளுக்கு தனி புழு மனை மல்பெரி நடவு மானியத்தை வழங்கினார்.

இவ்விழாவில் திரு R. சதீஷ் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்ணகிரி பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார் முனைவர் பாபுலால் இயக்குநர் மத்திய பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் புதிய தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கமளித்தார் முனைவர் B.T. ஸ்ரீநிவாஸ் இயக்குநர் மத்திய பட்டு இனவள மையம் ஓசூர் பங்கேற்றார்

மத்திய பட்டு வாரிய விஞ்ஞானிகள் பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் அலுவலர்கள் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர் திரு S.ரமேஷ் மண்டல இணை இயக்குனர் பட்டு வளர்ச்சித்துறை, தர்மபுரி அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது

0Shares

Leave a Reply