தஞ்சையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதால் சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என…
தஞ்சையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதால் சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தஞ்சையில் இன்று நடைபெற்ற மாநில மாநாட்டில் தமிழக அரசுக்கு ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
உரிமை குரல் ஓட்டுநகர் தொழிற்சங்க சார்பில் 2வது மாநில மாநாடு தஞ்சாவூரில ;இன்று நடைபெற்றது. இதில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள ஓட்டுநனர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் தற்போது பெட்ரோல் டீசல் விலை கடுமையான உயர்ந்து உள்ளத்hல் சுற்றுலா வாகனங்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் ஆட்டோவிற்கு கடந்த 12 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்த கோரிக்கை விடுத்து வருவதாகவும் ஆனால் அரசு பேருந்து கட்டணம் கூட பல முறை உயர்ந்து விட்டதால் ஆட்டோ ஓட்டுநனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் ஆட்டோ வாடகை நிர்ணய கட்டணததை உயர்த்த வேண்டும். சொந்த வானங்களை வாடகை வாகனங்களாக பயன்படுத்தோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களையும், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கோரிக்கை வைக்கவும் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது