நாச்சியார் கோயில் கேஸ் விலை உயர்வை கண்டித்து சிபிஎம் சிலிண்டருக்கு மாலை போட்ட நூதனப்போராட்டம்
![]()
நாச்சியார் கோயில் கேஸ் விலை உயர்வை கண்டித்து சிபிஎம் சிலிண்டருக்கு மாலை போட்ட நூதனப்போராட்டம்
கும்பகோணம் பிப்ரவரி 20
மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையால் சமையல் எரிவாயு பெட்ரோல் டீசல் விலை விண்னை முட்டும் அளவிற்கு விலை உயர்த்தியதை வாபஸ் பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமையில் சிலிண்டருக்கு மாலை இட்டு நூதன போராட்டம் நாச்சியார்கோவில் கடைத்தெருவில் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன் கண்டன உரையாற்றினார் ஒன்றிய குழு உறுப்பினர் ஆறுமுகம் ஆனந்தன் மாதர் சங்க பொறுப்பாளர் லதா ஜோதி ஜான்சிராணி, கௌரி, உள்ளிட்ட சிபிஎம் கட்சியினர் விலை உயர்வை ரத்து செய்திட கோரி முழக்கமிட்டனர்
