மாண்புமிகு அம்மா அவர்களின் முத்தான திட்டத்தின் கீழ் விலையில்லா மிதிவண்டிகள் பெற்ற நீலகிரி மாவட்ட மாணவ, மாணவிகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
நீலகிரி மாவட்டத்தில் 2012- 2013 முதல் 2020-2021 வரை பதினொன்றாம் வகுப்பு பயிலும் 46,153 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் ரூ.18.96 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
————————————————————————————————————-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வியில் தமிழகம் முதன்மை பெற வேண்டுமென்ற அடிப்படையில் நகர்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு கிடைக்க கூடிய அனைத்து வசதிகளும் கிராமப்புற மாணவ, மாணவியர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையில் அனைத்து மாணவ, மாணவிகளும் முழுமையான கல்வி பெற வேண்டும் என்ற அடிப்படையில் பள்ளி கல்வித்துறை சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
மேலும், தமிழக அரசு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளும் தரமான கல்வி சத்தான உணவு, விலையில்லா புத்தகப்பை, விலையில்லா காலணிகள், விலையில்லா கிரையான்ஸ், வண்ணபென்சில்கள், பாடபுத்தகம், பாடக்குறிப்பேடு, மிதிவண்டிகள், சீருடை, மடிக்கணினி, இலவச பேருந்து பயண அட்டை, விபத்தால் இறந்த/நிரந்தர முடக்கமடைந்த வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கான உதவி தொகை, இடை நிற்றலை தவிர்க்க சிறப்பு ஊக்கத்தொகை போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக மேல்நிலைப்பள்ளிகளில் 11 -ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த மாணவ, மாணவியர் அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002 ஆம் கல்வியாண்டில் மறைந்த மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது.
2005-2006 ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதி பெறும் பள்ளிகளில் 11 -ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர்கள் பயனடைந்து வருகிறார்கள். அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் ஒன்று தான் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் அவரவர் வசிக்கும் இடங்களிலிருந்து நகரத்திலுள்ள பள்ளிகளுக்கு செல்ல மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில், 2012-2013 ஆம் கல்வி ஆண்டில் 2,940 மாணவர்களுக்கும், 3,813 மாணவிகளுக்கும் மொத்தம் 6,753 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.07 கோடி மதிப்பிலும், 2013-2014 ஆம் கல்வி ஆண்டில் 3,000 மாணவர்களுக்கும், 3,780 மாணவிகளுக்கும் மொத்தம் 6,780 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.21 கோடி மதிப்பிலும், 2014-2015 ஆம் கல்வி ஆண்டில் 3048 மாணவர்களுக்கும், 3,903 மாணவிகளுக்கும் மொத்தம் 6,951 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.45 கோடி மதிப்பிலும், 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் 2,823 மாணவர்களுக்கும், 3,500 மாணவிகளுக்கும் மொத்தம் 6,323 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.23 கோடி மதிப்பிலும், 2016-2017 ஆம் கல்வி ஆண்டில் 2,607 மாணவர்களுக்கும், 3,610 மாணவிகளுக்கும் மொத்தம் 6,217 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.41 கோடி மதிப்பிலும், 2017-2018 ஆம் கல்வி ஆண்டில் 4,251 மாணவர்களுக்கும், 6,000 மாணவிகளுக்கும் மொத்தம் 10,251 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3.80 கோடி மதிப்பிலும், 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் 2,064 மாணவர்களுக்கும், 2,846 மாணவிகளுக்கும் மொத்தம் 4,910 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.93 கோடி மதிப்பிலும், 2020-2021 ஆம் கல்வி ஆண்டில், நமது மாவட்டத்திலுள்ள 52 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் 2,056 மாணவர்கள், 2,665 மாணவியர்கள் என மொத்தம் 4,721 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.86 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
2012-2013 முதல் 2020-2021 வரை பதினொன்றாம் வகுப்பு பயிலும் 46,153 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் ரூ.18.96 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவ, மாணவியர்கள் எவ்வித சிரமமுமின்றி பள்ளிக்கு சென்று கல்வி கற்று வருகின்றனர்.
விலையில்லா மிதிவண்டி பெற்ற மாணவன் கூறியதாவது:-
என் பெயர் லோகேஷ்வரன். நான் உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறேன். நான் ரோகிணி தியேட்டர் பகுதியில் வசித்து வருகிறேன். எனது பெற்றோர் கூலி வேலை செய்து வருகிறார். நான் வசிக்கும் பகுதியிலிருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டு வந்தேன். எனக்கு விலையில்லா மிதிவண்டி கிடைத்துள்ளது. இதன் மூலம் சிரமமின்றி பள்ளிக்கு சென்று வர வசதியாக இருக்கும். என்னை போன்ற ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி உதவிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
விலையில்லா மிதிவண்டி பெற்ற மாணவி கூறியதாவது:
என் பெயர் ரித்தியா. நான் உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறேன். நான் உதகை ரோஸ்மவுண்ட் பகுதியில் வசித்து வருகிறேன். எனது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். எனது தந்தையின் குறைந்த வருமானத்தை வைத்து தான் என்னை படிக்க வைக்கிறார்கள். மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் கொண்டு வந்த விலையில்லா மிதிவண்டி வழங்கும் ஒரு சீரிய திட்டத்தின் மூலம்; எனக்கு விலையில்லா மிதிவண்டி கிடைத்தது. இதன் மூலம் சிரமமின்றி பள்ளிக்கு சென்று வர வசதியாக இருக்கும். என்னை போன்ற ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி உதவிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசிற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
தொகுப்பு
நி.சையத் முகம்மத்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
ஓ.ர.மனோஜ்குமார்
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி)
நீலகிரி மாவட்டம்.