கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரி அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பாக சாலையில் வாழை மரம் நடும் போராட்டம்
கன்னியாகுமரி நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பிலிருந்து செல்லும் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் தினம், தினம் விபத்துக்கள் நடப்பதால் சாலையை உடனடியாக சரி செய்வதற்காக அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பாக மாநில துணைத் தலைவரும் வழக்கறிஞருமான சதீஷ் அவர்களின் தலைமையில் ரோட்டில் வாழை மரம் நடும் போராட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் முருகன், சந்தோஷ் மற்றும் முகமது ஆசிம் சங்கர் நாராயணன் ரபிக் கார்த்திக் கண்ணன் ஆறுமுகம் , உசேன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..