பள்ளிக் கல்வித் துறை சார்பாக 11 அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் 968 மாணவர்களுக்கு ரூ.38.26 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் வழங்கினார்…
பள்ளிக் கல்வித் துறை சார்பாக 11 அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும்
968 மாணவர்களுக்கு ரூ.38.26 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள்
மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் வழங்கினார்…
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் ஊராட்சி ஒன்றியம், தேசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் 11 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் 968 மாணவ, மாணவிகளுக்கு ரூ.38.26 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. சேவூர் எஸ். இராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திரு. தூசி கே. மோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. ச. அருள்செல்வம், ஆரணி மாவட்ட கல்வி அலுவலர்
திரு. த. சம்பத்து, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.