திருவண்ணாமலை மாவட்டத்தில் 2742. பெண்களுக்கு திருமண நிதி உதவி……
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலத்துறை மூலமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 2742. பெண்களுக்கு ரூ.20.39.கோடி செலவில் திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் பணிகளை . இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் .சேவூர். எஸ். இராமச்சந்திரன்.குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில். மாவட்ட ஆட்சியர். சந்திப் நந்தூரி. செய்யார் சட்டமன்ற உறுப்பினர். தூசி கே. மோகன். மாவட்ட சமூக நல அலுவலர். கந்தன். அரசு அலுவலர்கள். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ,கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், பயணிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் அமைச்சர் கூறியதாவது. மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள்.ஏழை. எளிய பெண்களின் திருமணத் தடைபடக் கூடாது என்பதற்காக சமூக நலத்துறை மூலமாக திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ். 8 கிராம் தங்க நாணயம் வழகினார்கள். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020- 2021 ஆம். ஆண்டில் பட்டம் படித்த 1498 பெண்களுக்கு தலா.ரூ.50,000/-வீதம் மொத்தம். ரூ,7,49, கோடி திருமண நிதி உதவியும். மற்றும். 10. 12.ம் வகுப்பு படித்த. 1244 பெண்களுக்கு. தலா ரூ.25,000/-விதம் மொத்தம் ரூ.3,11, கோடி திருமண நிதி உதவியும். ஆக மொத்தம்.2742. பெண்களுக்கு ரூ.10.60. கோடி செலவில் திருமண நிதி உதவியும். ரூ.9.79. கோடி செலவில் தலா 8 கிராம் தங்க நாணயம் . என மொத்தம் ரூ.20.39. கோடி செலவில் திருமண நிதியுதவியும் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. மற்றும். மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட 113 பெண்களுக்கு ரூ. 1. 37 கோடி செலவில் திருமண நிதியுதவியும். ரூ. 1. 26 கோடி செலவில் தலா. 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. என்றார்.