Today Rasi Palan: இன்றைய ராசிபலன்கள் – February 16, 2021

Loading

சென்னை: சார்வரி வருடம் மாசி 4ஆம் தேதி பிப்ரவரி 16, 2021 செவ்வாய்க்கிழமை. பஞ்சமி திதி மறுநாள் விடிகாலை 05.46 மணி வரை அதன்பின் சஷ்டி திதி. ரேவதி நட்சத்திரம் இரவு 08.56 மணி வரை அதன் பின் அசுவினி நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் மீனம் ராசியில் பயணம் செய்கிறார். சிம்மம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. செவ்வாய்கிழமை மங்களகாரகன் செவ்வாய் பகவான் ஆதிக்கம் நிறைந்த இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம் – சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு 12ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். பேச்சில் கவனமும் நிதானமும் தேவை.

ரிஷபம் – சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

மிதுனம் – சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு 10 ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவார்கள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்.

கடகம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

சிம்மம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.

கன்னி – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே சந்தோஷம் அதிகரிக்கும். இன்று வீட்டில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும்.

துலாம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும் நிதி நெருக்கடி நீங்கும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். உறவினர்கள் வழியிலும் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

விருச்சிகம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும். இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

தனுசு – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் விரயங்கள் ஏற்படலாம். மன நிம்மதி குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மகரம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வெற்றிகரமான நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். சேமிப்பு உயரும்.

கும்பம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் குடும்பத்தில் கவனம் தேவை. இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

மீனம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். லாபகரமான நாள். இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சுபகாரியங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *