Today Rasi Palan: இன்றைய ராசிபலன்கள் February 14, 2021

Loading

சென்னை: சார்வரி வருடம் மாசி 2 ஆம் தேதி பிப்ரவரி 14, 2021 ஞாயிறுக்கிழமை. திருதியை திதி இரவு 01.59 மணி வரை அதன்பின் சதுர்த்தி திதி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 04.32 மணி வரை அதன் பின் உத்திரட்டாதி நட்சத்திரம். கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசியில் சந்திரன் பயணிக்கிறார். கடகம் ராசியில் இருந்து சிம்மம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குகிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம் – சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சுப விரைய செலவுகள் வரும்.

ரிஷபம் – சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்திற்கு வருவதால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இன்று உங்களுக்கு எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைப்பட்ட சுபகாரியம் கை கூடும். பணவரவு அதிகரிக்கும்.

மிதுனம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் தேடி வரும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும்.

கடகம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த இரண்டு நாட்களாக இருந்த சிக்கல்கள் நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கும். சுப காரிய முயற்சி செய்யலாம் வெற்றி கிடைக்கும். புதிய முதலீடுகளுக்கு லாபம் கிடைக்கும்.

சிம்மம் – சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு வருவதால் இன்று சந்திராஷ்டமம் தொடங்குகிறது. ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடவும். புதிய முயற்சிகள், பண முதலீடுகள் இன்றைய தினம் செய்ய வேண்டாம்.

கன்னி – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு வருவதால் தம்பதியர் இடையே நெருக்கம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.

துலாம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது மூலம் லாபம் அடையலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.

தனுசு – சந்திரன் இன்றைய தினம் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் மனம் ஆன்மீக காரியங்களில் ஈடுபடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

மகரம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். புது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கும்பம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிப்பு உயரும்.

மீனம் – சந்திரன் இன்றைய தினம் உங்களை ராசிக்கு வருகிறார். மனதில் சிறு கலக்கம் வந்தாலும் எளிதில் சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் சிறு இடையூறுகள் உண்டாகும். பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் நன்மைகள் நடைபெறும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *