சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 108, மற்றும் 104,ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தருமபுரியில் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 108, மற்றும் 104,ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது இந்த நிகழ்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜ்குமார் மணிமாறன் முனுசாமி சிவகுமார் வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் சாமி.ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு பற்றிய குறும் படம் காண்பிக்கப்பட்டது.